மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவர் மீது போக்சோ வழக்கு
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவர் மீது அதியமான் கோட்டை காவலர்கள் போக்சோ வழக்கு;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பூதனஅள்ளி அருகே சென்னியம்பட்டி கொட்டாய் பகுதி சேர்ந்தவர் வெற்றிவேல் இவர் வெள்ளைக்கல் பகுதியில் பூச்சி மருந்து மற்றும் விற்பனை கடை வைத்து நடத்தி வருகின்றார். இவர் தனது மனைவி வழி உறவினர் பெண் ஒருவரை கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பிளஸ் ஒன் படிக்கும்போது மாணவி தினசரி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை தந்துள்ளார் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு தற்போது மாணவி கல்லூரி படிப்பு படித்து வரும் நிலையில் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.இதனை அடுத்து மாணவி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரின் பேரில் அதியமான் கோட்டை காவலர்கள் வெற்றிவேல் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்