கல்கூடபட்டியில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
பாலக்கோடு அருகே கல்கூடபட்டி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஞ்சப்பள்ளி அருகே உள்ள வேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம், நேற்று (ஏப்ரல்-23) ஓசூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி காய்கறிகள் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது அவர் ஓட்டிச்சென்ற சரக்கு லாரி பாலக்கோடு அருகே கல்கூடபட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வாகனத்தை நிறுத்தினார் இதனலையில் பின்னால் மிகவும் வேகமாக வந்த நெல் வாரம் ஏற்றுக் கொண்டு வந்த லாரி காய்கறி லாரி மீது பலமாக மோதியது இதில் லாரி சிறிதுவரும் இழுத்துச் செல்லப்பட்டு திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிதம்பரம் உயிர் தப்பினார். இதனுடைய சிசிடிவி காட்சி தற்போது தர்மபுரி மாவட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.