வாலிபர் மர்ம மரணம். உறவினர்கள் சாலை மறியல்
மதுரை திருமங்கலம் அருகே வாலிபர் மர்ம மரணம் குறித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை புதுாரைச் சேர்ந்த கொத்தனார் மருதுபாண்டி (27) என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அவருடன் மதுரையைச் சேர்ந்த மற்றொரு நபரும் சென்றார். இருவரும் மாதம் ஒருமுறை வீட்டிற்கு வருவார்கள் . இந்நிலையில் நேற்று ஈரோட்டில் இருந்து திருமங்கலம் வழியாக கல்லணைக்கு வந்துள்ளனர். ஆனால் மருதுபாண்டி வீட்டிற்கு சென்ற அந்த நண்பர் மருதுபாண்டியன் பெற்றோரிடம் அலைபேசி, மற்றும் டூவீலரை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார். அப்போது மருதுபாண்டி குறித்து பெற்றோர் கேட்டபோது வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். நீண்ட நேரமாக மருதுபாண்டி வராததால் பெற்றோர்கள் தேடிச் சென்றனர். கல்லணை ரோட்டில் படுகாயங்களுடன் மருதுபாண்டி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்ற போது சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்தால் மட்டுமே உடலை கொண்டு செல்ல விடுவோம் எனக்கூறி பெற்றோர், உறவினர்கள் கல்லணை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சடலத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப் பகுதியில் 2மணிநேத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.