வெப்ப அலை கணக்கிடும் முறையில் மாற்றம் வேண்டும் : கனிமொழி எம்பி
வெப்ப அலை கணக்கிடும் முறையில் மாற்றம் வேண்டும் : கனிமொழி எம்பி வலியுறுத்தல்!;
வெப்ப அலையைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், "காலநிலை மாற்றத்தின் பல்வகை தாக்கங்களைக் கணக்கில் கொண்டு வெப்ப அலையைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய புவி அறிவியல் அமைச்சத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறேன். வெப்பநிலையையும் தாண்டி, அதிகரித்து வரும் காற்றின் ஈரப்பதம்(Humidity) உள்ளிட்ட இதர காரணிகளையும் கருத்தில் கொண்டு வெப்ப அலையைத் தீர்மானிக்க வேண்டும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.