காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் டூவீலர்கள் பறிமுதல்.
காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் டூவீலர்கள் பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மாவட்ட காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் கலெக்டர். ச.தினேஷ் குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் 100க்கும் மேற்பட்ட டூவீலர்கள் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்ட ஆட்சியா் அதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். இதை அடுத்து, அங்கு வந்த பேரூராட்சி பணியாளா்கள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் ஆட்சியா் அங்கிருந்து புரப்பட்டு சென்றார். இதுகுறித்து போலீசார் கூறுபோது ‘பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக டூவீலர்கள் நிறுத்தும் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளனா்.