கண்டரமாணிக்கத்தில் பால்குட ஊர்வலம்

கோவில் திருவிழாவை முன்னிட்டு கண்டரமாணிக்கத்தில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது;

Update: 2025-04-24 12:42 GMT
திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தா்கள் பால்குடம் சுமந்து ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா். தெற்குப்பட்டு மூலஸ்தானத்துக்கு பக்தா்களால் கொண்ட செல்லப்பட்ட பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்நது, தெற்குபட்டு மூலஸ்தானத்திலிருந்து திருத்தோ் சப்பரத்தில் அம்மன் கோயில் வந்தடைந்தாா். இவ்விழாவில் சுற்றுப்புரக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்

Similar News