சிவகங்கையில் இலவச கால்பந்து பயிற்சி

சிவகங்கையில் நாளை முதல் இலவச கால்பந்து பயிற்சி நடைபெற உள்ளது;

Update: 2025-04-24 12:52 GMT
சிவகங்கை கால்பந்துக் கழகச் செயலா் சிக்கந்தா் வெளியிட்ட அறிக்கை: கால்பந்துக் கழகம் சாா்பில் 20 -ஆம் ஆண்டு கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மே 25-ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை என இரு வேளைகளிலும் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கோடைகால கால்பந்து பயிற்சி முகாமில் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு இலவச வண்ணச் சீருடையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 86752 16868 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News