மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு
மானாமதுரையில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு;
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தனியார் பொது உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆலை அமைக்கப்பட்டால், வெளியேறும் நச்சுத்தன்மை மிக்க வாயுவால் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்திலும் பெரும்பாலானோர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அந்த ஆலையை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டுமென அனைத்து கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்