ராசிபுரம் வட்டாட்சியர் பேருந்து வளைவு சாலையை கள ஆய்வு..

ராசிபுரம் வட்டாட்சியர் பேருந்து வளைவு சாலையை கள ஆய்வு..;

Update: 2025-04-25 14:59 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நாமக்கல் சாலை பழைய கோர்ட் வளைவு பகுதியை ராசிபுரம் வட்டாட்சியர் சசிகுமார் அவர்கள் மக்கள் நல குழுவின் நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கி இதன் பிரச்சனை குறித்து கூறியதை அடுத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். தற்போது இந்த பழைய கோர்ட் வளைவு பகுதியில் வாகன ஓட்டிகள் திரும்பி கடக்கும் போது பல்வேறு விபத்துகளில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வளைவு பகுதியில் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் வேகமாக திரும்பும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த வளைவு பகுதியில் ஒருவர் சிக்கி உயிரிழந்து உள்ளார். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் மக்கள் நல குழுவின் தலைவர் வி.பாலு,செயலாளர் நல்வினை செல்வன், கௌரவத் தலைவர் ஜெயபிரகாஷ், பொருளாளர் கா.முருகன், அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன்தாஸ் முருகேசன் சுந்தரம் ஆகியோர் வட்டாட்சியர் இடம் எடுத்து கூறினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் சசிகுமார் அவர்கள் தெரிவித்தார்.

Similar News