பள்ளி மாணவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு

பெரம்பலூர் அரசு மேனிலைப் பள்ளியில் 4வது NEET மாதிரித் தேர்வு;

Update: 2025-04-26 14:11 GMT
பெரம்பலூர்: பள்ளி மாணவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச NEET சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலில், மாவட்ட உதவித் திட்ட அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மேற்பார்வையில் முதுகலை ஆசிரியர்கள் வகுப்புநடத்தி வருகிறார்கள். இன்று 26-04-2025 பெரம்பலூர் அரசு மேனிலைப் பள்ளியில் 4வது NEET மாதிரித் தேர்வு நடைபெற்றது.

Similar News