பஞ்சப்பூர் பஸ் நிலையத் தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

மே 9-ந் தேதி திறப்பு விழா;

Update: 2025-04-27 12:56 GMT
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் புதிய ஒருங்கி ணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தை அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும் அப்பகுதியில் பெரியார் சிலை, அண்ணா சிலை மற்றும் பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் கலைஞர் சிலை யையும் திறந்து வைக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங் கேற்கும் முதல்-அமைச்சர், முடிவற்ற திட்ட பணிகளை தொடக்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமார் 55 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை வழங்குகிறார். இந்த அரசு விழாவிற்கான ஏற்பா டுகள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பஞ்சப்பூர் பஸ் நிலையம் மற்றும் அரசு விழா நடைபெறும் இடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநக ராட்சி ஆணையர் சரவணன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Similar News