போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து விற்பனை

2 ரவுடி உள்பட 7 பேர் கைது;

Update: 2025-04-27 12:59 GMT
திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் அரியமங்கலத்தை சேர்ந்தவர்களான சண்முக பிரியன் (வயது 20), ரியாஸ் அஹமத் (24), விஷால் கிருஷ்ணா (20), இப்ராஹிம் மூசா (21) மற்றும் ரவுடிகளான தீபக் (20), உதுமான் அலி (22) ஆகியோர் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் தங்களுக்கு செலுத்திக் கொண்ட தோடு, அதனை விற்றதாக தெரிகிறது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து 105 போதை மாத் திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் எடத்தெருவில் பாய்கடை சந்து பொது சுகாதார வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்ற அரியமங்கலத்தை சேர்ந்த அசார் முக மது (27) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

Similar News