டீ கடையில் குட்கா விற்றவர் கைது
காஜாமலை மெயின் ரோட்டில் உள்ள டீ கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்;
திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் உள்ள டீ கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சையது இப்ரா கிம் சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையில் இருந்த காஜாமலையை சேர்ந்த கவுரி சங்கர் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.