விசாகப்பட்டினத்தில் இருந்து நாகைக்கு ரயில் மூலம் கடத்தப்பட்ட
ரூ.12 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது;
நாகைக்கு, விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்பட்டிருப்பதாக வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து, இவரது தலைமையில், வெளிப்பாளையம் போலீசார் வெளிப்பாளையம் நாடார் குளத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (27-ம் தேதி) இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பில் 12 கிலோ கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணியில் அவர்கள், வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ரேவதி (37), ஆழியூர் அருகே கோயில் கடம்பனூரை சேர்ந்த பிரகாஷ் (30), இவரது மனைவி ரேணுகா (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் பிரகாஷ், தனது மனைவி ரேணுகாவுடன் கஞ்சா கடத்தி வந்து நாகை, திருவாரூர் பகுதியில் ரேவதி மற்றும் ரிக்கிப் பாண்டி, அருள்பிரகாஷ் ஆகியோர் உதவியுடன் விற்பனை செய்வது தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.