பாலக்குறிச்சி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

பெரியாச்சி, காத்தவராயன் வேடமிட்ட கலைஞர்களின் தத்ரூப நடன காட்சி;

Update: 2025-04-28 07:24 GMT
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஆண்டுதோறும் 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 20 -ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவில், முக்கிய நெகிழ்ச்சியான தீமிதி திருவிழாவை முன்னிட்டு, பெரியாச்சி, நடன காளி, புலிக்குட்டி, காத்தவராயன் உள்ளிட்ட வேடமிட்ட கலைஞர்களின் தத்ரூப நடனத்துடன் அம்மன் வீதியுலா காட்சி நேற்று நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடந்த வீதியுலா புறப்பாட்டின் போது, நடன கலைஞர்களின் நடனத்தை வழி நெடுகிலும் அம்மனை தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Similar News