வாழக்கரையில் இணைய வழி பயிர் கணக்கெடுப்பு பயிற்சி

கீழ்வேளூர் வேளாண் பயிற்சி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம்;

Update: 2025-04-28 07:35 GMT
நாகை மாவட்டத்தில், இணைய வழி பயிர் கணக்கெடுப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு தமிழக அரசால் நடைபெற உள்ளது. இக்கணக்கெடுப்பு, தமிழகம் முழுவதும் விவசாயிகளால் முப்போகமும் விளைவிக்கப்படும் விளைபொருட்களின் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி, நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் தலைமையில் இணைய வழி பயிர் கணக்கெடுப்பு பற்றிய பயிற்சிகள் கீழையூர் ஒன்றியம் வாழக்கரையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.  இப்பயிற்சியில், கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, பயிர் கணக்கெடுப்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்றும், அவற்றின் முழு விவரங்களை விவசாயிகளுக்கு  தெளிவாக எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், திருக்குவளை  வேளாண்மை உதவி இயக்குநர் வை.பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.செல்வம் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News