கொங்கராயநல்லூர் கிராமத்தில் வடிகால் வாய்க்கால்களில்
தூர்வாரும் பணி - கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட அம்பல் கிராமத்தில், கொங்கராயநல்லூர் வடிகால் மற்றும் நூலாற்றில் பிரியும் கொங்கராயநல்லூர் வடிகால் வாய்கால்களில் தூர்வாரும் பணிகளை தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் அன்பானந்தம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.