கன்னியாகுமரி, சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாட்கள் தவவேள்வி ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 111 நாட்கள் நடைபெறும். நாட்டில் தெய்வநீதம், அரச நீதம், மனிதநீதம் ஆகிய மூன்று நீதங்களும் தழைக்க வேண்டி நடைபெறும் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்சிக்கு நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். மாவட்ட திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி 111 நாட்கள் தவவேள்வி யை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வர் டாக்டர் டி சி மகேஷ், அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவவேள்வியில் தொழில் மேன்மை, கல்வி , வேளாண்மை உட்பட பல்வேறு மேன்மைகள் வேண்டி 111 நாட்கள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாகுழுவினர் செய்து வருகின்றனர்.