மீனம்பநல்லூர் தூய பாத்திமா அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா

கண் கவர் வாண வேடிக்கைகளோடு மின் அலங்கார தேர் பவனி;

Update: 2025-05-16 11:06 GMT
நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த மீனம்பநல்லூரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலய மின் அலங்கார திருத்தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்தாண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் ஆலயத்தில் நவநாள் மன்றாற்று நடைப்பெற்று வந்தது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி  நடைப்பெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய பாத்திமா அன்னை  எழுந்தருளினார். முன்னதாக, கருங்கண்ணி பங்குத்தந்தை டேவிட் செல்வகுமார்  தலைமையில், கூட்டு பாடல், திருப்பலி நடைப்பெற்றது. பின்னர், தேரினை புனிதம் செய்து தொடங்கி வைத்தார். ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க தேர் பவனி தொடங்கியது. பவனியானது கண்கவர் வாண வேடிக்கைகளோடு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News