புகலூர் நால்ரோடு அருகே சட்ட விரோத கள்ள லாட்டரி விற்பனை ஒருவர் கைது.
புகலூர் நால்ரோடு அருகே சட்ட விரோத கள்ள லாட்டரி விற்பனை ஒருவர் கைது.;
புகலூர் நால்ரோடு அருகே சட்ட விரோத கள்ள லாட்டரி விற்பனை ஒருவர் கைது. புகலூர் பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் சண்முகானந்தா வடிவேலுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மே 18ஆம் தேதி மாலை 6 மணி அளவில், புகழூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள நால்ரோடு பஸ் ஸ்டாப் அருகே சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட புஞ்சை புகழுரை சேர்ந்த தங்கவேல் வயது 57 என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் விற்பனைக்கு வைத்திருந்த கள்ள லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.