க.பரமத்தி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு. மகளிர் காவல்துறை நடவடிக்கை.
க.பரமத்தி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு. மகளிர் காவல்துறை நடவடிக்கை.;
க.பரமத்தி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு. மகளிர் காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் தனுஷ்கோடி வயது 20. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி 17 வயது சிறுமியை காட்டம்பட்டி காமாட்சி அம்மன் கோவில் வைத்து திருமணம் செய்தார். அந்த சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து அறிந்த க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் ராணி வயது 55 என்பவர், கரூர் ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து மகளிர் காவல் ஆய்வாளர் மேனகா சிறுமியை திருமணம் செய்து கொண்ட தனுஷ்கோடி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.