ரயில் பயணத்தின் போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிப்பு.

ரயில் பயணத்தின் போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிப்பு.;

Update: 2025-05-20 08:50 GMT
ரயில் பயணத்தின் போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிப்பு. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் வயது 55. இவர் நேற்று இரவு மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சியில் இருந்து கோவைக்கு குடும்பத்துடன் சென்றார். இந்த ரயில் கரூர் மாவட்டம் மாயனூர் - கரூர் இடையே வந்த போது, ஆரோக்கியராஜ்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அறிந்த ரயில் டிக்கெட் பரிசோதகர் உடனடியாக கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தயார் நிலையில் வைக்கப்பட்டது. பிறகு மயிலாடுதுறை- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், ஆரோக்கியராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால், கரூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Similar News