வடமதுரை மற்றும் வேடசந்தூர் மின்தடை விபரம்
வடமதுரை மற்றும் வேடசந்தூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம்;
வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாதபுரம், காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிப்புரம், நல்லபொம்மன்பட்டி, கோட்டூர், கன்னிமார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல், வேடசந்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.வடமதுரைவடமதுரை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி தும்மலக்குண்டு, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சிக்காளிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல், வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.