வேலம்பாடியில் பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலம்பாடியில் பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-05-20 09:46 GMT
வேலம்பாடியில் பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வேலம்பாடியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சார்பாக, புதிதாக கட்டப்பட்ட 32 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,கரூர் எம்பி ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, பள்ளப்பட்டி நகர மன்ற தலைவர் முனைவர் ஜான், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரதுரை மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை அனைவரும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News