திராவிட கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்த மொழிக் கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கையை திணிப்பை கண்டித்து திராவிட கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள முன்மொழி கொள்ளை மற்றும் தேசிய கல்விக் கொள்கையால் பள்ளி பயிலும் மாணவ மாணவியர்களின் மேல் படிப்பானது பாதியில் இடைநிறுத்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும்.இதனால் மாணவ மாணவியர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி மீண்டும் அவர்கள் குலத்தொழில் செய்யும் சூழ்நிலை ஏற்படப் போவதாகவும் இதனால் முற்றிலும் கல்விக் கொள்கை என்பது முடக்கப்படுவதால் வருங்கால மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது எனது மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழி கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கை இனிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கூறி 50க்கும் மேற்பட்ட திராவிட கழகத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தமிழர் சமூக நீதிக் கழகம் ,தமிழக வாழ்வுரிமை, திருவள்ளுவர் இலக்கிய பேரவை உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.