கரூரில் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.

கரூரில் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.;

Update: 2025-05-20 13:19 GMT
கரூரில் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. பாகிஸ்தான் தீவிரவாதிகள், பஹல்காமில் இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொண்டதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க இந்திய ராணுவம் சிந்தூர் ஆபரேஷனை நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்து ஒழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியா நடத்திய இரண்டு நாள் போர் தாக்குதலை கூட தாக்குபிடிக்க முடியாமல் இந்தியாவிடம் சமரசம் பேசி போரை நிறுத்தியது பாகிஸ்தான். திட்டமிட்டு வீரத்துடன் தாக்குதலை நடத்திய இந்திய ராணுவ பெண் அதிகாரிகளை ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டியது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் இன்று கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணி பேருந்து நிலைய ரவுண்டானா வரை சென்று நிறைவடைந்தது. பேரணியின் போது இந்திய ராணுவத்தையும், பிரதமர் மோடியையும் வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News