மருத்துவர் நகரில் டூ வீலர்கள் மோதல். கணவன் -மனைவி படுகாயம்.
மருத்துவர் நகரில் டூ வீலர்கள் மோதல். கணவன் -மனைவி படுகாயம்.;
மருத்துவர் நகரில் டூ வீலர்கள் மோதல். கணவன் -மனைவி படுகாயம். கரூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் முருகேசன் வயது 69.இவரது மனைவி விஜயலட்சுமி வயது 64. இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் மாலை 4:30 மணி அளவில் கரூர் - ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வாகனம் மருத்துவ நகர் பிரிவு அருகே வந்தபோது, அதே சாலையில், கரூர் சடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்வர்பாத்அலி வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், முருகேசன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில், முருகேசன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான ஸ்வர்பாத்அலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் நகர காவல் துறையினர்.