தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு;

Update: 2025-05-20 19:11 GMT
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகாசன பைரவருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது . இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அறங்காவலர் குழு சார்பாக நீர்மோர் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன், கேப்டன் பிரபாகரன், ராமானுஜம், சுசிலா ராஜ் மற்றும் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ், ஜெகநாதன், மணியம் அரவிந்தசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News