ஆண்டிபட்டி அருகே காரில் கடத்தி வந்த போதை வஸ்துகள் காருடன் பறிமுதல்.

ஆண்டிபட்டி அருகே காரில் கடத்தி வந்த போதை வஸ்துகள் காருடன் பறிமுதல்.;

Update: 2025-05-21 02:49 GMT
ஆண்டிபட்டி அருகே காரில் கடத்தி வந்த போதை வஸ்துகள் காருடன் பறிமுதல். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்தர் சிங் வயது 24 மற்றும் சேலம் செல்லிபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் இருவரும் ஒரு காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் கூல் லிப் போதை பொருட்களை சேலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் செல்வதற்காக கடத்திச் சென்றனர். இவர்களது வாகனம் நேற்று மாலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை அருகே வந்தபோது கார் பஞ்சரானது. பஞ்சர் ஒட்டுவதற்காக அரவக்குறிச்சி தாலுக்கா, ஆலமரத்து பட்டி சேர்ந்த கார்த்திகேயன் 39 என்பவர் சென்றுள்ளார். காரை பார்த்து சந்தேகம் அடைந்த அவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினரை பார்த்து வீரேந்தர் சிங் மற்றும் ஆனந்தகுமார் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை காவல்துறையினர் விரட்டி சென்று வீரேந்தர் சிங்கை கைது செய்தனர். ஆனந்தகுமார் தப்பி ஓடி விட்டார். காரை திறந்து பரிசோதனை செய்தபோது 25 மூட்டைகளில், 308.25 கிலோகிராம் எடை கொண்ட கணேஷ் புகையிலை, சுமார் 11.490 கிலோ கிராம் எடை கொண்ட, 2- மூட்டை கூல்லிப் புகையிலையும் இருப்பது கண்டு பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களை மதிப்பு ரூபாய் 1,88,112- என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பிடிப்பட்ட வீரேந்தர் சிங்கை சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஆனந்த குமாரை தேடி வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Similar News