திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (மே 20) இரவு தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் அரசு பேருந்து ஓட்டுனருக்கும் திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். மேலும் மோதலின் பொழுது காவல்துறையினர் அங்கு இல்லாததால் தொடர்ந்து இந்த மோதலானது கிட்டத்தட்ட அறைமணி நேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.