குழந்தைகளுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா கையில் குழந்தைகளுடன், அம்மன் வேடமிட்டும், கருப்பணசாமி வேடமிட்டும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்;
98 பட்டி தாய் கிராமமான மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன், பகவதியம்மன், லட்சுமி விநாயகர் கோவிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 381 வது வைகாசி திருவிழா கடந்த 13ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 15 நாட்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வு இன்று காலை துவங்கியது. இதில் காப்பு கட்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கையில் குழந்தைகளோடும், காளியம்மன் பகவதி அம்மன் வேடம் அணிந்து மற்றும் கருப்பணசாமி வேடமணிந்து பக்தர்கள் 200க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர், தலைவர் ஊர் நாட்டாமை அழகர்சாமி தலைமையில், துணை தலைவர் அரசு ஒப்பந்ததாரர் மேட்டுப்பட்டி முருகன், செயலாளர் கைலாசம், பொருளாளர் முருகன், இணை பொருளாளர் வினோத் குமார், ஊர் சேர்வை முருகேசன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். மேலும் 23ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 24ம் தேதி தெப்ப உற்சவத்துடன் வைகாசி திருவிழா நிறைவடைகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.