வெள்ளியணை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.
வெள்ளியணை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.;
வெள்ளியணை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு. உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அரசு துறை நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மனு அளிக்க வரும் பொது மக்களை சரியான முறையில் காவலர்கள் நடத்துகின்றார்களா? காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் சரியான முறையில் இயங்குகிறதா? கைதிகள் அறையில் அனைத்து வசதிகளும் உள்ளதா? மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் எடுக்கப்படுகிறதா? காவலர்கள் பணி நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தார்களா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.