கரூரில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்- மௌன அஞ்சலி செலுத்திய கட்சியினர்.

கரூரில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்- மௌன அஞ்சலி செலுத்திய கட்சியினர்.;

Update: 2025-05-21 10:28 GMT
கரூரில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்- மௌன அஞ்சலி செலுத்திய கட்சியினர். கரூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 34 ஆவது நினைவு நாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள குமரன் சிலை முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகரத் தலைவர் வெங்கடேஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோகுலே, மாநகர துணை தலைவர் கண்ணப்பன், சண்முகசுந்தரம், தாந்தோணி குமார், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், மாணிக்கம், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மேலும் ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News