ஒருவருக்கு மண்டை உடைப்பு, அரிவாளுடன் கார் பறிமுதல்

சின்னாளபட்டி பிரிவில் சிகரெட் வாங்கியதற்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு மண்டை உடைப்பு, அரிவாளுடன் கார் பறிமுதல்;

Update: 2025-05-21 10:51 GMT
திண்டுக்கல் சின்னாளப்பட்டி பிரிவு அருகே தனபால் என்பவரின் டீ கடையில் சிகரெட் வாங்கியதற்கு கூகுள் பே-ல் பணம் அனுப்பியது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கட்டையால் தாக்கியதில் ஒருவருக்கு மண்டை உடைப்பு. மேற்படி சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிகரெட் வாங்கியது தொடர்பாக கூகுள் பே-ல் பணம் அனுப்பியது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக அருவாளை எடுத்து வந்து மிரட்டியதாகவும் அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவருக்கு மண்டை உடைந்ததாகவும் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, ஆயுதங்களுடன் இருந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News