சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம்

கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை பதிவு செய்ய முயன்ற 6 பேரிடம் போலீசார் விசாரணை - சிசிடிவி வெளியீடு;

Update: 2025-05-21 10:55 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் தனியார் லே அவுட்டில் 6 ஆயிரம் சதுரடிக்கு மேல் உள்ள காலி மனையை சிங்கப்பூரில் வசிக்கும் ராமச்சந்திரன் 1995-ல் கிரையம் பெற்றுள்ளார். தற்போது அந்த சொத்து மதுரையில் வசிக்கும் ராமச்சந்திரன் வசம் இருப்பதாக தெரிவித்து அதை வாடிப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு கிரையம் கொடுக்க ஆவணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சார் பதிவாளர் ராஜேஷ் பிரபு ஆவணம், அடையாள அட்டைகளை சரி பார்த்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து ஆவண முறைகேடு அரங்கேற்றி நிலத்தை அபகரிக்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக சார் பதிவாளர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் செய்து ஆள்மாறாட்டம் செய்தவர், உடன் வந்தவர்கள், கார் டிரைவர் உட்பட 6 பேர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News