தேனி - மதுரை சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தேனி சார்நிலைக் கருவூலம் அருகே சர்வீஸ் ரோடு ஓரத்தில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாததால் இரவில் பயணிப்போர் சாக்கடை அமைக்கும் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை தேவை.