இயற்கை அழைப்புக்கு சென்றவரை மிரட்டி மொபைல் போன் பணம் பறித்த மூன்று பேர் கைது.

இயற்கை அழைப்புக்கு சென்றவரை மிரட்டி மொபைல் போன் பணம் பறித்த மூன்று பேர் கைது.;

Update: 2025-05-21 13:53 GMT
இயற்கை அழைப்புக்கு சென்றவரை மிரட்டி மொபைல் போன் பணம் பறித்த மூன்று பேர் கைது. கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் 28. தனியார் டெக்ஸ் நிறுவன ஊழியர். மே 16ம் தேதி சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் பிரிவு அருகே டூவீலரில் சென்று கொண்டு இருந்தார் . அப்போது ,இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்தி உள்ளார். அங்கு மற்றொரு டூவீலரில் வந்த மூன்று பேர் கார்த்திகை மிரட்டி அவரது மொபைல் போன் & ரூ. 47,500-ஐ பறித்து சென்றனர். சம்பவம் குறித்து கார்த்தி கொடுத்த புகாரில், வேலாயுதம் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் பணம் & மொபைல் போனை பறித்த வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன்,புஞ்சை புகலூரை சேர்ந்த ரூபன், இப்ராஹிம் ஆகிய மூன்று இளைஞர்களையும் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News