மலைக்கோட்டை அருகே அலங்கார நுழைவு வாயில் விவகாரம்
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே அலங்கார நுழைவு வாயில் விவகாரம் - கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்;
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலு என்பவர் மதுரை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அய்யன் குளத்தை சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்கவும், அப்பகுதியில் வழிபட அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். அதோடு மலைக்கோட்டை அருகிலேயே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வு, திண்டுக்கல், மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையை தொடரவும், வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.