மருத்துவ உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே மருத்துவ உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை;
திண்டுக்கல் கள்ளிப்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(35) இவர் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.