நத்தம்: தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

நத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி;

Update: 2025-05-22 20:02 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலகத்தில் 1434- ஆம் பசலிக்கான (வருவாய் தீர்வாயம்) ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பயனாளி ஒருவருக்கு பட்டா மாறுதல் செய்து புதிய பட்டா வழங்கப்பட்டது. நிகழ்வில் நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, நத்தம் வட்டாட்சியர் ஆறுமுகம், தனி வட்டாட்சியர் விஜயலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

Similar News