நெல்லை மாநகர டவுன் தாலுகா அலுவலகத்தில் உள்ளே செல்லும் வாசலில் நாய்கள் உலா வருகின்றன. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் அச்சத்துடன் வருகின்றனர். தற்போது தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறுவதால் பொதுமக்கள் அதிகளவில் வருகை தரும் நிலையில் இந்த நாய்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.