கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏமப்பேர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 33 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 2 புதிய வகுப்பறை கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து க.மாமனந்தல் கிராமத்தில், கனவு இல்ல திட்ட வீட்டின் கட்டுமான பணி மற்றும் 9 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உலர்களம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், மோகூரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய நியாய விலை கடை கட்டுமான பணி; 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொது சுகாதார கழிவறை கட்டடம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலக வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.