கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது.

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது.;

Update: 2025-05-23 10:33 GMT
கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. பொதுமக்களின் நில உடமைகளை உறுதி செய்வதற்காக ஜமாபந்தி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்தந்த கிராமங்களில் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா மாறுதல் செய்யப்பட்டு இருக்கும் நபர்களின் பெயர்கள் பதிவேடுகளில் உள்ளதா என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்படுகிறது. கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலர் கலால் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் மொத்தம் 32 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் குமரேசன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்று செயல்பட்டு வருகின்றனர்.

Similar News