மருத்துவ அலுவலரின் ஏதோச்சதிகார போக்கை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து அரசு ஊழியர்கள் போராட்டம்.
மருத்துவ அலுவலரின் ஏதோச்சதிகார போக்கை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து அரசு ஊழியர்கள் போராட்டம்.;
மருத்துவ அலுவலரின் ஏதோச்சதிகார போக்கை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து அரசு ஊழியர்கள் போராட்டம். கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் பகுதியில் பணியாற்றி வரும் மண்டல மருத்துவ அலுவலர் மோகனவள்ளி, அரசு அலுவலர்களிடம் ஏேதச்சதிகாரப் போக்கோடு செயல்படுவதோடு, அரசு ஊழியர்களை தகாத வார்த்தை பேசுவதால், அவரது செயல்பாட்டை கண்டித்து இன்று மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பணியாற்ற கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணியின் போது கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட மைய தலைவர் அன்பழகன் கூறும்போது, மருத்துவ அலுவலர் மோகனவள்ளி செயல்பாட்டை கண்டித்து முதல் கட்டமாக கருப்பு பட்டை அணிந்து இன்று போராட்டம் நடத்தி வருகிறோம். இரண்டாவதாக காத்திருப்பு போராட்டமும், மூன்றாவதாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு, அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆயினும் மருத்துவ அலுவலர் மீது பணியிட மாற்றம் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.