திருவிழாவின்போது ,இளைஞர்களையும், பெண்களையும் , தகாத வார்த்தை பேசி, ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி. இடம் மனு அளித்த கிராம மக்கள்.
திருவிழாவின்போது ,இளைஞர்களையும், பெண்களையும் , தகாத வார்த்தை பேசி, ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி. இடம் மனு அளித்த கிராம மக்கள்.;
கரூர் அருகே திருவிழாவின்போது ,இளைஞர்களையும், பெண்களையும் , தகாத வார்த்தை பேசி, ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி. இடம் மனு அளித்த கிராம மக்கள். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள தளிவாசல் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் எங்கள் ஊரில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எங்களைப் பற்றி தரக்குறைவாகவும், பெண்களை கண்ணிய குறைவாகவும் பேசியவர்கள் மீது எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தளிவாசல் பகுதியைச் சேர்ந்த கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, எங்கள் ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், நேற்று எங்கள் ஊரில் நடைபெற்ற திருவிழாவிழாவின்போது அடியாட்களுடன் வந்து இளைஞர்களைதகாத வார்த்தை பேசி ஜாதி பெயரை சொல்லி திட்டி தாக்கி உள்ளார். மேலும், எங்கள் ஊர் பெண்களை கண்ணிய குறைவாக பேசி இழிவு படுத்தி உள்ளார். தொடர்ந்து இதுபோல பலமுறை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்பதற்காகவே இழிவான செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது எஸ்.சி. எஸ் டி பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.