திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா

திருவிழா;

Update: 2025-05-24 03:48 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த ஈய்யனுார், திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 16ம் தேதி துவங்கியது. தேர் திருவிழாவையொட்டி, காலை 5:30 மணிக்கு, அர்ஜூனன் தபசு மரம் ஏறுதல், அரவான் பலி, அர்ச்சுனன் மாடு திருப்புதல், காளி கோட்டை இடித்தல், தீ மிதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரோடும் வீதி வழியாக தேர்வடம் பிடித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை கிராம மக்கள் மேற்கொண்டனர்.

Similar News