முத்தரையர் சமுதாய மக்களுக்கு அ.தி.மு.க. மட்டும் தான் தொடர்ந்து மரியாதை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவையொட்டி அ.தி.மு.க., மாலை அணிவித்து மரியாதை;
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக சார்பாக கழக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நத்தம் விசுவநாதன் நிருபர் களிடம் கூறும்போது, "முத்தரையர் சமுதாய மக்களுக்கு அ.தி.மு.க. மட்டும் தான் தொடர்ந்து மரியாதை அளித்துவருகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் இந்த சமுதாயத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தார். திருச்சியில் பேரரசர் பெருமிகு முத்தரையர் சிலையை உருவாக்கியவர் ஜெயலலிதா. அதேபோல மணிமண்டபம் அமைத்துக் கொடுத்தது இபிஎஸ் மணிமண்டபத்தை கட்டி கொடுத்தது இபிஎஸ் ஆனால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது திமுக அரசு. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திறந்து வைப்பது திமுகவினர். மேலும் மணிமண்டபம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் திமுக அரசு தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மணிமண்டபம் கட்டபட்டதால் பராமரிக்கப்படாமல் உள்ளது மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மணிமண்டபம் சிறப்பாக பராமரிக்கப்படும் என தெரிவித்தார்.