நாகை ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மின்சாதன பொருட்கள் பயிற்சி
நாகை ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மின்சாதன பொருட்கள் பயிற்சி;
நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதன பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி 30 நாட்களுக்கு அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில், பேசிக் ஒயரிங், சீலிங் பேன். டேபிள் பேன். மிக்ஸி, கிரைண்டர் மோட்டார், வாட்டர் மோட்டார், வாட்டர் ஹீட்டர், அயன்பாக்ஸ் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வருகிற 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. 18 முதல் 45 வயதுடையவர்கள் பயிற்சியில் சேர தகுதியானவர்கள். 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10 - ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி அடையாதவர்கள், டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு, 6374005365, 9047710810 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.