திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில்

வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்;

Update: 2025-05-24 09:50 GMT
தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன், நாகை மாவட்டம் திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில், நிகழாண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே 21- ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் அதனைத் தொடர்ந்து, கொடி மரத்திற்கு பால், பன்னீர், மஞ்சள் பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஓலைச் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன வீதி உலா காட்சி வருகிற ஜூன் 4-ம் தேதியும், தேரோட்டம் வருகிற ஜூன் 6- ம் தேதியும், வைகாசி விசாக தீர்த்தவாரி உற்சவம் வருகிற ஜூன் 9 -ம் தேதியும் நடைபெற உள்ளது.

Similar News