மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி.

மதுரையில் மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2025-05-24 10:03 GMT
மதுரை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த, காவலர் மோகன்குமார் என்பவர் தனது வீட்டின் அருகில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக, அருகிலிருந்த மரத்தின் கிளை முறிந்து ஏற்பட்ட விபத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி மாதம் 06.02.2025ம் தேதி அன்று இயற்கை எய்தினார். மறைந்த காவலரின் குடும்ப நலன் கருதி, உதவி செய்யும் விதமாக காவல்துறையில் அவருடன் பணியில் சேர்ந்த 2017 ஆம் ஆண்டு காவல் நண்பர்கள் மூலம் திரட்டப்பட்ட மொத்த பணம் ரூபாய் 22,18,300 க்கான காசோலை மற்றும் சேமிப்பு திட்ட பத்திரங்களை நேற்று (23.05.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் அவர்கள் காவலரின் குடும்பத்தாரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News